தன்னலம் இன்றி தரணி செழிக்க வந்த தாமிரவர்ணி
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
பொங்கி எழும் பொருநை
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
அள்ளிக்கொள்ள ஆவலை துண்டுகிற தாமிரவர்ணி
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
ஞாயிறு, 10 ஜூலை, 2011
கேள்விப்பட்டவை
8:37 AM
Raja
அதைத்தான் செய்தார் ஒரு தபால்காரர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அவர் திருடியது DVD மற்றும் கம்ப்யூட்டர் கேம்ஸ் அடங்கிய பார்சல்களைத்தான். உரியவர்கள் அளித்த புகாரின் பேரில், இவரை ஆதாரத்துடன் பிடிக்க துடித்தது தபால் துறை. இவரது அதிகாரிகளே தெரிந்தவர்கள் பெயரில் பார்சல்களை அனுப்பி வலை விரித்து காத்திருந்தார்கள். அவர்களது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை; சிக்கிக்கொண்டவர் அடம்பிடிக்காமல் சுலபமாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். போலீஸ் புகார், வழக்கு என அடுத்து நடைபெற வேண்டிய சம்பிரதாயங்கள் அடுக்கடுக்காய் நடந்தேறின. 22 ஆண்டு அனுபவம்; ஆண்டொன்றிற்கு ரூபாய் 22.50 லட்சம் சம்பளம் அனைத்தையும் இழந்துவிடும் அபாயம்.
அது மட்டுமா?
இன்னும் என்னென்ன தண்டனையோ?
முதலில் இப்படியெல்லாம் தான் பயந்து போனார்.
ஆனால், நீதிமன்றம் கருணை காட்டியது.
ஏன்?
கடந்த ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் பிரான்ஸிலுள்ள டிஸ்னிலேண்டுக்கு போனார் அவர். அங்கே, ராட்சச ஆகாய சறுக்கிலேறி விளையாடினார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. 10 வயது சிறுவனாக பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது, இவர் பயணம் செய்த பள்ளிக்கூட வேன் மிகவும் கோரமான விபத்துக்குள்ளானதில் தலையில் காயத்துடன் உயிர் பிழைத்தது இவர் ஒருவர் தான். அந்த விபத்தை நினைவுகளாகவும் காட்சிகளாகவும் மனத்திரையில் ஓட வைத்தது இந்த ஆகாய சறுக்கு விளையாட்டு. அப்போதுதான் ஒரு பயங்கரமான சம்பவத்திற்குப்பின் ஏற்படும் மன அழுத்தக்கோளாறுக்கு அவர் ஆளானதும், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுமே அவர் இது போன்ற திருட்டுக்களை செய்யக்காரணமாக அமைந்ததென்றும்; இது ஒரு அபூர்வ நிகழ்வென்றும்; எனவே கருணைகாட்ட வேண்டுமென்றும் வாதாடினார் அவரது வழக்கறிஞர்.
டிஸ்னிலேண்டிலுள்ள அந்த ஆகாய சறுக்கு மிகவும் பயங்கரமான வளைவுகளையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டது என்றும் அதன் வேகம் மிகவும் அதிகம் என்பதையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குறைந்த பட்ச தண்டனையாக வழக்கு செலவுக்கான தொகையை அபராதமாகவும் 6 மாதங்களுக்கு அவர் மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை வீட்டைவிட்டு வெளியே செல்லத்தடைவிதித்தும் தீர்ப்புக்கூறியது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கற்பனையல்ல; இங்கிலாந்திலுள்ள ஹார்விச் நகர தபால் நிலையத்து 43 வயது தபால்காரர்,
ஜார்ஜ் ராம்ப்ளின் என்பவரது உண்மை வழக்கு
நடந்தவை
8:34 AM
Raja
கண்களை திறந்து பார்க்கிறேன்.
ஒரு மருத்துவமனையின் ‘தீவிர சிகிக்சை பிரிவில்’ நான்.
என் உடலெங்கும் குழாய்கள் செறுகப்பட்டுள்ளன.
மூக்கு;
கைகள்;
வாயினுள் ஒரு ராட்சச குழாய்!
அதன் மறுமுனையோ ஒரு இயந்திரத்துடன்.
அதுதான் இப்போது எனக்கு பதில் சுவாசிக்கிறது.
இதென்ன அசிங்கமாய்?
அந்த குழாயை பிடுங்கிப்போட்டுவிடலாமென்றால்....................
என்னால் அசைய முடியவில்லை.
எனக்கு என்னவாயிற்று?
மனது விழித்திருக்கிறது;
ஆனால், உடலோ முடக்கத்தில்.
என்னவாயிற்று எனக்கு?
இயங்கும் இமைகள்;
சுழற்சியை நிறுத்திக்கொண்ட கண்கள்.
பரபரப்பாய் என்னை சுற்றி டாக்டர்களும், நர்சுகளும்.
அவர்களது, செயல்கள் தெரிகிறது;
பேச்சு கேட்கிறது.
“சிகிச்சைக்கு பலனில்லையாம்;
எனக்கு மூளை சாவாம்”
- தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் டாக்டர்கள்.
அதுவும் கேட்கிறது.
என்னை உயிருடன் புதைக்கப்போகிறார்களா?
"ஓ" வென கதற நினைக்கிறேன்,
எண்ணம் செயலாவது சாத்தியபடவில்லை.
நடு மூளையில் ஏற்பட்ட கடுமையான ‘ஸ்ட்ரோக்’;
உறைந்து போனதாம் இரத்தம்.
கடந்த வார விடுமுறை நாட்கள் -
லேசான தலைவலி;
'ஏதோ தவறு நடந்திருக்கிறது'
என்று புரியுமளவுக்கு
வலி அதிகரித்துக்கொண்டே போகிறது.
கிராமத்திலிருந்து பயணப்படுகிறேன்;
நகரத்து மருத்துவமனையை நோக்கி -
கணவர், குழந்தைகளுடன்.
நா குழறுகின்றது;
பார்வை மங்கத்துவங்குகிறது.
‘மைக்ரேன்’, என்று கண்டுபிடித்த மருத்துவர்
கொடுத்த மாத்திரைகளோடு
வீடு வந்து சேர்ந்தது - நினைவில்லை.
மூன்று தினங்களுக்கு பிறகு,
இரத்தம் உறைந்து போன இடம்
அறுவை சிகிச்சைக்கு சாத்தியபடாத இடம் என்றார்கள்.
உயிர் பிழைக்கும் வாய்ப்பு பாதிக்கும் குறைவு.
ஆபத்து நிறைந்த சவாலை ஏற்கத்தயாரானால்
என்னை கோமா நிலைக்கு கொண்டுசென்றாக வேண்டுமாம்;
உயிரைக்காப்பாற்ற;
சவாலை ஏற்றேன்.
மூன்று தினங்கள் நகர்ந்ததை அறியேன்.
விடை பெற்றுப்போயிருந்தது கோமா.
கண் விழித்தால்;
சோகத்தை மறைத்துக்கொண்டு,
ஆறுதலாய் விரல்கள் பற்றிய என் கணவர்.
உடல் நலம் குறைந்தவளாக
என்னை அறிந்தவரில்லை.
இரண்டாம் பிரசவம் - 'சிஸேரியன்'.
அப்போது கூட, சில நாட்களில்
‘ஜிம்மு’ க்கு செல்லத்தயாரானேன்.
ஏதேதோ பேச நினைக்கிறேன்!
சக்கர நாற்காலியில் நான்
அழைத்துச்செல்லப்படுவதை
என் குழந்தைகள் பார்த்தார்களா?
என்னைப்போலவே பயந்து போனார்களா?
எங்கே அவர்கள்?
அவர்களைக்காணாமல் துடித்துப்போகிறேன்.
என் துயர் களைபவர் யார்?
வலியை உணருகிறேன் இப்போது;
அப்படி ஒரு 'மரண வலி' உடலெங்கும்.
தினமும் என்னை இப்படியும், அப்படியுமாய்
புரட்டி போட்டு சோப்பு நீரால்
உடல் துடைத்து சுத்தம் செய்யும் செவிலியர்கள்.
'பெட்ஸோர்' வராமல் தவிர்ப்பதற்காகவாம்.
குறுகிப்போகிறேன் வெட்கத்தால்; அவமானத்தால்.
படுக்கையை விட்டு எழுந்து,
நடை பயிற்சி செய்யச்சொல்லும் 'பிஸியோதெரப்பிஸ்டுகள்'.
களைப்பில் தூங்கிபோகிறேன்,
அவர்களது பயிற்சிக்குப்பின்னர்.
மற்ற நேரங்களில், என்னைப்பார்க்க யாரெனும் வருவார்களா?
என்று
கடிகாரத்தின் முட்களைப்பார்த்துகொண்டே கழிகிறது பொழுது.
அருகமர்ந்து, என்னையே பார்த்துக்கொண்டு - என் தாய்.
'என் உடலில் ஏதாவது அசைவுகள் ஏற்பட்டுவிடாதா' என்ற ஆவலில்.
"மூளை கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலைக்கு வர தொடங்குகிறது",
- டாக்டர்கள் இப்படி சொன்னதும்,
சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாள் அம்மா.
‘தூக்கமின்மை’ - இது போன்ற நிலையில் ஒரு பக்க விளைவாம்.
நான் தூங்குவதாக நினைத்துக்கொண்டு,
சிரிப்பும், அரட்டையுமாய் இரவுப்பணியிலிருக்கும் செவிலியர்கள் -
நாட்கள் நகர்ந்தன.
பக்கத்து படுக்கையிலிருந்த ஒருவர் இறந்து போனார்.
மரண பயம் என்னை ஆட்கொண்டது.
அவர் உயிர் பிரிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்:
'இனி பலனில்லை;
வேண்டாமிந்த வேதனை;
செயற்கை சுவாசத்தையும், சிகிச்சையையும் நிறுத்தி விடலாம்'
- அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் பேசுவது எனக்கு கேட்கிறது.
'ஒருவேளை, என்னைப்பற்றியும் இப்படி பேசும் நிலை ஏற்படுமோ?'
இதயம் துடிப்பதையே நிறுத்திவிடும் போலிருந்தது.
கண்களிலிருந்து புறப்பட்ட கண்ணீர் துளிகள்;
கன்னங்களை கடந்து,
கீழ் நோக்கி தன் பயணத்தைத்தொடர்ந்தது.
‘கடவுளே!’ எதையாவது செய்து நான் உயிருடன் தான் இருக்கிறேன் -
என்பதை தெரிந்து கொள்ள மாட்டார்களா?
இல்லை!
அவர்களை பொறுத்தவரை எனக்கு மூளை சாவு; பிழைக்கப்போவதில்லை.
மூன்று வாரங்கள்.
என் அசைவுகளை என் கணவர் அறிகிறார்;
என் அறையில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது;
செய்திகள் பார்க்கிறேன்; கேட்கிறேன்.
பிடிக்காத நிகழ்சிகளுக்கு,
தானே தடா போடும் கண்கள்.
ஒரு நாள்,
'நான் பேசுவது உனக்குக்கேட்கிறதா?
கண்களை மட்டுமாவது இமைக்கூடாதா?'
- ஆற்றாமையில் அவர்.
ஏதோ ஒரு சக்தி!
உடலெங்கும் ஒரு திடீர் மகிழ்ச்சி பிரவாகம்!!
கண்களை திறக்கிறேன்!!!
'ம் ....... இன்னொரு முறை' - அவர்.
‘அப்படியே செய்கிறேன்’.
"நர்ஸ்.................!!!!!!"
"அவளுக்கு நினைவு வந்துவிட்டது";
"கண்களைத்திறக்கிறாள்".
அவரது குரல், மருத்துவமனை முழுவதும் எதிரொலிக்கிறது.
'மகிழ்ச்சி' வார்த்தைகளில் அடங்க மறுக்கிறது.
ஒரு அற்புதமான விடியல்.
இந்த நோய்க்கு,
'லாக்ட் - இன் சிண்ட்ரோம்'
என்று பெயராம்.
நினைவிருக்கும்; விழித்திருப்பார்கள்.
கண்கள் தவிர மற்ற தசைகள் இயங்க மறுக்கும்.
டாக்டர்களின் விளக்கம் - இது தான்.
என் விஷயத்தில்,
மேலும் நடத்தப்பட்ட பரிசோதனைகள்,
- இதைத்தான் உறுதி செய்தன.
இதுவரையிலும்,
குழந்தைகள் என்னைப்பார்ப்பதை அனுமதிக்கவில்லை.
இப்போது அவர்கள் என்னருகே.
என் ஆசை மகள் -
நான் ஏதோ வீட்டில்,
அடுக்களையில் சுழன்று கொண்டிருக்கும் 'சராசரி தாய்’
என்று நினைத்தவளாய்,
'அன்று பள்ளியில் நடந்தவற்றைப்பற்றியெல்லாம்',
விவரித்துக்கொண்டிருந்தாள்.
கடைக்குட்டி - சுட்டிப்பையன்.
என் கண்களை அருவியாக்கிய அந்த பிஞ்சு முகம்;
அவனை, மார்போடு வாரியணைக்க போராடுகிறது மனது;
‘ஒத்துழையாமை இயக்கத்தில்’ தீவிரமாய் உடல்.
9 வாரங்களுக்கு பிறகு,
சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறேன்.
என் நிலைமையை புரிந்து கொண்டு,
அதற்கேற்ப வாழ பழகிக்கொள்ள வேண்டுமாம்.
நடப்பதும், பேசுவதும் இயலாதாம்.
டாக்டர்கள் நேரடியாக கூறவில்லை.
எனினும், நிலைமை எனக்கு புரிந்தது.
சில வாரங்களுக்குள்,
அந்த அதிசயம் நடந்தது.
என் கை கட்டை விரல் அசைந்தது.
நம்ப முடியவில்லை தான்;
இப்போது, நானே அசைத்துப்பார்க்கிறேன்.
என் கட்டளைக்குப்பணிகிறது.
அப்படியானால், அது என் கற்பனையல்ல.
மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும்
என் முன்னே அதிகம் காட்டிக்கொள்ளாத
என் கணவரும் மற்றவர்களும்,
உள்ளுக்குள் துள்ளிக்குதிக்கிறார்கள்.
டாக்டர்களே ஆச்சரியத்தில்!
இது போன்ற அதிசயத்தை
அவர்கள் இதுவரை சந்தித்ததில்லையாம்.
மேற்கொண்டு என்ன செய்யலாம்?
திட்டமிடுவதற்கு தயாரானார்கள் அவர்கள்.
ஒரே மாதத்தில்,
எழுந்து உட்கார்ந்தேன்.
பேச்சு – வயப்படவில்லை.
போர்டில் எழுதப்பட்ட எழுத்துக்களை
படிக்க போராடினேன்.
இன்னும் சில வாரங்களில்,
முதன் முதலாக பேசினேன்.
ஏதோ விலங்குகளின் ஓலமாக இருந்தது.
பலன் தர துவங்கியது
பேச்சுக்கலை வல்லுனர்களின் முயற்சி.
உச்சரிப்பில் தெளிவு பிறக்க ஆரம்பித்தது.
வாரத்திற்கு இரண்டு மணி நேரம்
- வீட்டுக்கு போக அனுமதித்தார்கள்.
பின், இரவு தங்குவதாக அனுமதி
மாறிப்போனது.
இப்படி போய் வருவது
- சிரமமாகத்தான் இருந்தது.
எனக்கு பரிச்சயமாகிப்போன
சப்தங்கள், வாசனைகள்;
திறந்திருந்த ரெஃப்ரிஜிரேட்டர்;
இயக்கத்திலிருந்த கம்ப்யூட்டர்;
ஓ.....
இத்தனை நாளும் இதெல்லாம் தானே
நான் இழந்திருந்தேன்.
எட்டு மாத ஆஸ்பத்திரி வாசம்.
ஆம்;
இன்று நான் வீட்டிற்குப்புறப்படுகிறேன்.
காலையிலிருந்தே அனைத்தையும்
’வீடியோ காமிரா’ வில்
படம் பிடிக்கத்துவங்கி விட்டாள் – அம்மா.
செவிலியர் புடை சூழ,
இன்று வரை என்னைச்சுமந்த
சக்கர நாற்காலிக்கு நன்றி கூறி,
ஊன்றுகோல்களிடம் என்னைத்தருகிறேன்.
இப்போது நான் வீட்டில்.
நடை பயில்கிறேன்;
’ஜிம்மு’க்கு போகிறேன்.
இரண்டே மாதங்களில்,
ஊன்றுகோல்களுக்கும் விடை கொடுத்தாகிவிட்டது.
எப்படியும் ஓடிப்பார்த்து விடுவதென்று,
வைராக்கியம் வளர்த்தேன்,
அதுவும் முடிந்தது.
சேறு கண்ட மைதானத்தில் ஓடினேன்.
மகிழ்ச்சி எல்லை அறியவில்லை.
நீண்ட பெரு மூச்சு.
புதிதாய் பிறந்தேன்
பழைய மனுஷியாக!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- கற்பனையல்ல, இங்கிலாந்தின் யார்க்ஷயர் மாகாணத்தை சேர்ந்த சாதனைப்பெண் கதேயின் உண்மைக்கதை -

